2,020 கிலோ கிராம் ஹெரோயின், 4,013 கிலோ கிராம் ஐஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன், 15,564 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 43.3 கிலோ கிராம் கொக்கெய்ன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தவிர இந்தக் காலகட்டத்தில் அதிகாரிகள் 4.8 மில்லியன் போதை மாத்திரைகளையும் 2.1 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்தக் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 281,320 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேநரேம் அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 481 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடருந்து உரையாற்றிய அவர், 2015 ஆம் ஆண்டு 43 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 476 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2016 ஆம் ஆண்டு 44 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 502 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2017 ஆம் ஆண்டு 33 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 452 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2018 ஆம் ஆண்டு 61 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 493 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2019ஆம் ஆண்டு 38 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 481 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2020ஆம் ஆண்டு 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 464 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2021ஆம் ஆண்டு 22 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 568 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு 81 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 601 கொலை சம்பவங்களும் பாதிவாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு 74 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 515 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு 102 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 598 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment