Ads (728x90)

உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

டிரம்ப் விதித்த சுங்க வரிகள் (tariffs) கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாகவும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் இவ்வாறான வரிகளை விதிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் 6-3 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்துள்ளது.

வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது என்றும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget