Ads (728x90)

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget