கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரேகொட பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்துக் குறித்த இரட்டை கொலை இடம்பெற்றது.
குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய சுத்த' என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment