போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக அணித்தலைவர் மிட்சல் மார்ஸ் 54 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில் 182 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க குவித்த முதலாவது சதம் இதுவாகும். மற்றும் குசல் மெண்டிஸ் 51 ஓட்டங்களையும், ரத்னாயக்க 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி இலங்கை அணி குறித்த தொடரில் 6 புள்ளிகளுடன் சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Post a Comment