Ads (728x90)

ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. 

இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இன்று பிற்பகல் கண்டி - பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், மகேஷ் தீக்‌ஸன 2 விக்கெட்டுக்களையும், டில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget