புதிய நீதிமன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் தலைமையில் நீதிமன்ற செயற்பாடுகள் அனைத்தும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய நீதிமன்றங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய நீதிமன்றங்களில் பெரும்பாலானவை குற்றவியல் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யவுள்ளன.
இத்துடன் சிவில் மேல்முறையீட்டு வழக்குகளையும், வணிக வழக்குகளையும் விசாரணை செய்வதற்கு, தலா 02 நீதிமன்றங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.

Post a Comment