இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.
இஷான் கிஷான் 87 ஓட்டங்களையும், திலக் வர்மா 25 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 32 ஓட்டங்களையும், கஷிவம் டுபே 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சய்ம் அயூப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்றது.
உஸ்மான் கான் 44 ஓட்டங்களையும், ஷஹீன் ஷா அப்றிடி 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சார் பட்டேல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 'A' குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
Post a Comment