Ads (728x90)

ஐசிசி ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. 

நேபாளம் அணி சார்பில் திபெந்திர சிங் ஐரி அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றார். 

இந்தநிலையில் 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget