கொழும்பு, சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் வைத்து இவர் 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற இவர், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment