பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது இவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கு அனுமதி இல்லை.
நிதி வழங்கக் கோரி சில குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளும் அழுத்தங்களால் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளானால், மாணவர்களின் நலன் கருதி அதில் தலையிடும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு உண்டு.
பாடசாலைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர் அல்லது பழைய மாணவர் குழுக்கள் தன்னிச்சையாக வழங்கும் பங்களிப்புகளைத் தடுக்க முடியாது. இருப்பினும் இதுவரை இது தொடர்பாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment