இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணியின் தலைவர் எய்டன் மார்க்ரம் அதிபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் கனடா அணியின் பந்துவீச்சாளர் அன்ஷ் படேல் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
கனடா அணி சார்பில் நவ்நீத் தாலி மட்டும் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி அபாரமாகப் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Post a Comment