Ads (728x90)

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 07வது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜார்ஜ் முன்சி 84 ஓட்டங்கள‍ையும், பிராண்டன் மெக்முல்லன் 41 ஓட்டங்களையும், மைக்கேல் ஜோன்ஸ் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.

தொடர்ந்து போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணியானது 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இத்தாலி அணி சார்பில் பென் மனேண்டி 52 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் மைக்கேல் லீஸ்க் அதிகபடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget