கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி-யாழ்ப்பாணம் வீதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் இந்த திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள், இன்றிலிருந்து 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சுரங்கப்பாதைத் திட்டத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி, அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் சுமூகமாக உரையாடினார்.


Post a Comment