இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன தெரிவித்தார், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றார்.
மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

Post a Comment