மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் பயன்படுத்தப்படும் Agoda இணையத்தளம், நுவரெலியாவை "குட்டி இங்கிலாந்து" (Little England) எனச் சிறப்பித்துக் கூறியுள்ளது.
இங்குள்ள பசுமை படர்ந்த உயர்தரத் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைச்சரிவுகள் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சங்களாகும்.
காலனித்துவ காலத்து கட்டடங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
இதமான மற்றும் குளிர்ச்சியான காலநிலை நுவரெலியாவின் மிகச்சிறந்த அடையாளமாகும் எனவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவுடன் இணைந்து ஆசியாவின் ஏனைய புகழ்பெற்ற மலைப்பிரதேசங்களான இந்தியாவின் சிம்லா மற்றும் மூணாறு, மலேசியாவின் கெமரன் மலைப்பகுதி, வியட்நாமின் சாபா மற்றும் டலாட், இந்தோனேசியாவின் பண்டுங், பூட்டானின் திம்பு என்பன பட்டியலிடப்பட்டுள்ளன.
39 மொழிகளில் சேவைகளை வழங்கும் Agoda இணையத்தளம், உலகின் மிகப்பெரிய சுற்றுலா இணையத்தளங்களில் ஒன்றாகும்.

Post a Comment