Ads (728x90)

2026 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களினால் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி 2025 ஜனவரி மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 573.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதற்கமைய கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுப் பணவனுப்பலானது 178.1 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பை காட்டியுள்ளது. மேலும் 2026 ஜனவரி மாதத்தில் சுற்றுலா வருமானமாக 378.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. 

2025 ஜனவரி மாதத்தில் கிடைத்த சுற்றுலா வருமானம் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், 2026 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இது 5.6 சதவீத வீழ்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget