Ads (728x90)

பிரித்தானியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக சலுகை வழங்கல் திட்டத்தின் கீழ் (Developing Countries Trading Scheme), பிரித்தானியாவிற்கு அனுப்பத் தயாராகும் ஆடை வகைகளை பார்வையிட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் மற்றும் கைத்தொழில் மற்றும் முற்சியாண்மை பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோர் வடகொழும்பு பகுதிகளில் அமைந்துள்ள ஆடை லொஜிஸ்டிக்ஸ் மற்றும் தர உறுதி நிலையங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த விஜயம் 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானியாவின் வரி இல்லா வர்த்தகத் திட்டத்தின் திருத்தங்களைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

புதிய மாற்றங்களின் அடிப்படையில் இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகளாவிய அளவில் துணி கொள்முதல் செய்யும் வசதியை பெற்றுள்ளதுடன், அதே நேரத்தில் பிரித்தானிய சந்தையில் வரி இல்லா அணுகலைத் தொடர முடியும்.

இந்த திருத்தங்கள் இலங்கையை முன்னணி ஆடை விநியோக மையமாக வலுப்படுத்துவதோடு, ஏற்றுமதி பல்துறை விரிவாக்கத்திற்கும், உற்பத்தி, லொஜிஸ்டிக்ஸ் மற்றும் களஞ்சியத் துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget