Ads (728x90)

வங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது. 

தொடர்ந்து 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது, ரி20 உலகக்கிண்ணப் போட்டி வரலாற்றில் ஒரு அணி பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. 

இந்தச் சாதனைக்குச் சொந்தமான இலங்கை அணி, 2007 ஆம் ஆண்டில் கென்யாவிற்கு எதிராக 260 ஓட்டங்களைக் குவித்திருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget