Ads (728x90)

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்” இன்று நாடாளுமன்றத்தில் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.

இதனிடையே இந்த சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இந்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக இது நடைமுறைக்கு வருகின்றது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீக்கப்படுவதுடன், தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் அதற்கு உரித்துடையவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget