Ads (728x90)

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி, அனர்த்தங்களுக்குப் பின்னரான உதவித் திட்டங்கள் மற்றும் நாணய நிதியத்தின் ஆதரவுடனான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் எதிர்ப்பு மற்றும் நல்லாட்சி மறுசீரமைப்புகள் ஊடாகப் பொருளாதாரத்தை வேகப்படுத்த தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜோர்ஜீவா சுட்டிக்காட்டினார்.

அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். 

குறிப்பாக கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வீடமைப்பு மற்றும் காணி மறுசீரமைப்புப் பணிகளுக்கும் உடனடி உதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்

 

Post a Comment

Recent News

Recent Posts Widget