Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு இரண்டு வாரகால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடல்நல குறைபாடு காரணமாக மைத்திரி விக்ரமசிங்க இன்று முன்னிலையாக முடியாது என தெரிவித்துள்ளதாகவும், இரண்டு வார காலங்கள் கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக மைத்திரி விக்ரமசிங்கவை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இங்கிலாந்தின் வுல்ப்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது அரச பணம் விரயமாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், மைத்திரி விக்ரமசிங்கவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget