ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது போட்டியில் இத்தாலி அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைக் குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் அதிபட்சமாக ஷாய் ஹோப் 75 ஓட்டங்களைப் பெற்றார்.
இத்தாலி அணி சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய கிரிஷன் களுகமகே 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
166 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 18 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்று தோல்வியைடைந்தது.
இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மேத்யூ போர்டு 3 விக்கெட்டுக்களையும், ஷமர் மற்றும் ஜோசப் தலா 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
Post a Comment