Ads (728x90)

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கி, அடிமுடி காண முடியாத 'லிங்கோற்பவ மூர்த்தியாக' உருவெடுத்த திருநாளாகும்.

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனப்படும் 64 சிவ வடிவங்களில் மிக முக்கியமானது லிங்கோற்பவ வடிவம். பிரம்மா (அறிவு) அன்னமாகவும், திருமால் (செல்வம்) வராகமாகவும் முயன்றும் காண முடியாத ஜோதிப் பிழம்பாய் சிவன் நின்ற கோலம் இது. வெறும் அறிவாலோ அல்லது செல்வத்தாலோ இறைவனை அடைய முடியாது, தூய அன்பால் மட்டுமே அவரை உணர முடியும் என்பதே இதன் தாத்பரியம்.

மகாசிவராத்திரி அன்று முழுநேர உபவாசம் இருப்பது அவசியம். அன்று இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் நான்கு ஜாமங்களிலும் சிவனை வழிபட வேண்டும்.

இந்த நான்கு காலங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, திருமுறைகள் மற்றும் சிவபுராணம் ஓதுவது பெரும் புண்ணியத்தைத் தரும்.

இரவு முழுவதும் கண்விழிக்க இயலாதவர்கள் கூட, மகாசிவராத்திரி அன்று நள்ளிரவு 11:30 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை உள்ள ஒன்றரை மணி நேரத்தை 'லிங்கோற்பவ காலம்' என்பர்.

இந்த நேரத்தில் சிவனை வழிபடுவது பன்னிரு கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்ததற்குச் சமமான பலனைத் தரும் என்பது ஐதீகம்.

நோன்பும், உறக்கத்தைத் தவிர்ப்பதும் வெறும் சடங்குகள் அல்ல, அவை நமது புலன்களை அடக்குவதற்கான பயிற்சிகள். புலன்களை அடக்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் ஞானம் பெருகும். 



 

Post a Comment

Recent News

Recent Posts Widget