முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
மார்க் செப்மன் 48 ஓட்டங்களையும், டெரில் மிச்செல் 32 ஓட்டங்களையும், பின் அலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மாக்கோ ஜென்சன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஏய்டன் மார்க்ராம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
Post a Comment