Ads (728x90)

எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓமானை 96 ஓட்டங்களால் அயர்லாந்து வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ஓட்டங்களைக் குவித்து நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது.

ஓமானுக்கு எதிராக இலங்கை பெற்ற 225 ஓட்டங்கள் என்ற சாதனையை அயர்லாந்து முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டியது.

அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் லோக்கன் டக்கர் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கெரத் டிலேனி 56 ஓட்டங்களையும், ஜோர்ஜ் டொக்ரெல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஓமான் அணி சாரபில் பந்துவீச்சில் ஷக்கீல் அஹ்மத் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 18 ஓவர்களில் 139 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆமிர் கலீம் 50 ஓட்டங்களையும், ஹமாத் மிர்ஸா 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 3 விக்கெட்களையும், பெறி மெக்காத்தி மற்றும் மெத்யூ ஹம்ப்றீஸ் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget