Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை நுவரெலியா மாவட்ட நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதி பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். 

ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர். 

இச்சந்திப்பின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அந்த சமூகத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மிக நெருக்கமான முறையில் கலந்துரையாடினார்.
மலையக மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்தும் அவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" என தோட்டத் தொழிலாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget