புதுடெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி, இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் வரவேற்கப்பட்டார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

Post a Comment