Ads (728x90)

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு  தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவ்லின் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்களிப்பின் அடிப்படையில், இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்து தூதுக்குழுவினர் திருப்தி வெளியிட்டனர். 

அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. 

மலையகப் பிரதேசங்களில் நிலவும் நீண்டகாலச் சூழலியல் பாதிப்புகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, அச்சூழல் மண்டலங்களை மீட்டெடுத்தல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாரங்களை அமைத்துக் கொடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார். 

இச்சவால்களை எதிர்கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget