Ads (728x90)

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  

இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளாத பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து இருக்கும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget