Ads (728x90)

சென்னையில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுதாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து182 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகப்படியாக குல்படின் நைப் 63 ஓட்டங்களையும், செடிகுல்லா அடல் 29 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர்.

183 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை சுவீகரித்தது.

நியூசிலாந்து அணி சார்ப்பில் அதிகப்படியாக டிம் சீபர்ட் 65 ஓட்டங்களையும் , கிளென் பிலிப்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget