Ads (728x90)

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான ”பொடி லெசி” என்ற ஜனித் மதுசங்க இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்க இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 

இதனையடுத்து அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். 

நேற்று முன்தினம் இந்தியாவுக்குச் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனிதா மதுசங்க காலி மாவட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget