Ads (728x90)

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்துக்கு தன்னார்வ ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து எரிசக்தி அமைச்சருக்கு இச்சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. 

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. அத்தியாவசிய சேவைகளை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை இவ்வேலை நிறுத்தம் மீறுவதையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியிருந்த போதிலும், வேலைநிறுத்தம் தோல்வியடைந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 25 வீதத்துக்கும் குறைவான ஊழியர்களே அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருந்தனர். 

மின்சார சபையில் நடந்து வரும் சீர்திருத்த செயல்முறையை சீர்குலைக்கும் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான அரசியலை ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இணங்க இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

எனவே இதனை ஆதரிக்கும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்க வேண்டாம். கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் இணைந்து கொள்ளவில்லை. சீர்திருத்தங்களைத் தடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில் எந்த நடவடிக்கைகளிலும் பங்கேற்க போவதில்லை. எனவே தொழிற்சங்க அழுத்தங்களுக்கு ஆளாக வேண்டாம் என தன்னார்வ தொழிற்சங்கத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget