Ads (728x90)

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை சிம்பாப்வே அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய சிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றார். 

இதனையடுத்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவஸ்திரேலிய அணி, 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்மூலம் ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிம்பாப்வே அணி சார்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget