Ads (728x90)

 ”ஹிமிகம” (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்ட நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அநுராதபுர மாவட்டத்தில் 500 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன், 50 பயனாளிகளுக்கு 'ஹிமிகம' பூரண அளிப்புப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாள ரீதியில் வழங்கி வைத்தார்.

மக்கள் புதிய உலகத்திற்குள் நுழையும்போது, அவர்களின் காணிகளை கடுமையான சட்டங்களால் பிணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது அரசாங்கம் நம்புவதாகவும், எனவே மக்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக பூரண அளிப்புப் பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காணிகளைப் பாதுகாத்து, தமக்குப் பிறகு தமது பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது என்றும், இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உணவுப் பாதுகாப்பிற்கு அவசியமான காணிகள் ஒதுக்கப்படும் அதே வேளை, முறையான ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget