அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அமெரிக்க இராணுவம் ஈரானின் ஏவுகணைத் திட்டங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை முற்றாக அழித்து, அதன் இராணுவ தொழில்துறையை முடக்கப் போகிறோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஈரானிய இராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கைவிட வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment