Ads (728x90)

இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் விளைவாக ஈரானின் அதிஉயர்  தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

"வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அவர், இது ஈரானிய மக்களுக்கும், ஈரானால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிநவீன உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன், இஸ்ரேலுடன் இணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கமேனியுடன் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), இராணுவம் மற்றும் காவல்துறையினர் இனி போரிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்கள் ஈரானிய தேசப்பற்றாளர்களுடன் இணைந்து அமைதியான முறையில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

"இப்போது இணைந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும், தாமதித்தால் மரணமே பரிசாகக் கிடைக்கும்" என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget