Ads (728x90)

பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். 

இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

பவன் ரத்நாயக்க 58 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 76 ஓட்டங்ககளையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget