Ads (728x90)

மக்களுக்கு பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் ஒரு பலமான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகளுக்கும், 342 நடத்துநர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் பல்வேறு முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்த இ.போ.சபையை மீண்டும் ஒரு வலுவான பொதுப்போக்குவரத்துச் சேவையாகக் கட்டியெழுப்ப நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்ததோடு புதிய நியமனம் பெற்றவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் நமது நாட்டு மக்களுக்கு பயணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலாச்சார ரீதியான பிணைப்பு உள்ளது. இன்று சாரதிகளாகவும், நடத்துநர்களாகவும் நீங்கள் இணைவது அத்தகைய வரலாற்றைக் கொண்ட, மக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்த ஒரு சேவைக்காகும். அதேபோல், இ.போ.சபையை தற்போதுள்ள நிலையிலிருந்து உயர்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என நான் கருதுகிறேன். 

அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, அந்த பஸ்களில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்துச் சிந்தித்தும் செயல்படும் புதியதொரு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே இதில் இணையும் உங்களால் இ.போ.சபைக்குள் புதிய கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார். 


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget