Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி. எஸ். ராஜகருணா நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 Ceypetco எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளபடவுள்ளது. 

இதன் பிரகாரம் இன்று மட்டும் 310,200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget