நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி அளித்துள்ள நிலையில், பொதுமக்கள் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில், விவசாயம் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்குபவர்கள், அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அதேநேரம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment