Ads (728x90)

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ரோஹன் ஒலுகல உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவு, நாட்டின் எந்தப் பகுதியிலும் நேரடியாகச் சென்று சோதனைகளை நடத்தும் அதிகாரத்தைக் கொண்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்துடன், பொலிஸ் மா அதிபரினால் சேவைத் தேவையை கருத்திற்கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புகள், சூதாட்ட நிலையங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை வழிநடத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல பாரிய சட்டவிரோத செயல்களைக் கண்டறிந்த பெருமை இந்தப் பிரிவுக்கு உண்டு. புதிய பணிப்பாளர் ரொஹான் ஓலுகலவின் தலைமையில் இந்தப் பிரிவின் நடவடிக்கைகள் வரும் காலங்களில் மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget