அதற்கமைய பிப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தோடு இதற்கு முன்னர் 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருந்த தனித்துவமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல், உணவு விநியோகம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு, தபால் மற்றும் ஊடக சேவைகள், நிலச்சரிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சேவைகள் ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளன.
இந்த மீளறிவித்தல் மூலம், அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் குறித்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment