Ads (728x90)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதிகளில் உள்ள போதாமையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மாலைதீவில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலருந்து சிறிய கப்பல்கள் மூலம் தலா 8,000 மெட்ரிக் டன் எரிவாயு இலங்கைக்குக் கொண்டுவரப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 8,000 மெட்ரிக் டன் எரிவாயு துறைமுகத்திற்கு வந்து சேர்கிறது. இருப்புகள் தீரும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எரிவாயு கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, லிட்ரோ நிறுவனம் 100,000 புதிய கொள்கலன்களுக்கான வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கான கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. மஞ்சள் நிற கொள்கலன்களை பயன்படுத்துவோர் நீல நிற கொள்கலன்களுக்கு மாற முற்பட்டபோது ஏற்பட்ட அதிகரித்த தேவையே இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது.

எரிவாயு மற்றும் எரிபொருள் விவகாரத்தில் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget