Ads (728x90)

சட்டவிரோதமான முறையில் சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார்.

வாக்குமூலம் வழங்க வந்திருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget