அதன்படி, குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், பொதுச் சுகாதார துறை அதிகாரிகள் என 526 உத்தியோகத்தர்களுக்கு டிப்ளோமா பட்டங்களும், மருந்தாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பாடசாலை பல் மருத்துவர் சேவை உத்தியோகத்தர்கள் என 426 பணியாளர்களுக்கு உயர டிப்ளோமா பட்டங்களும் வழங்கப்பட்டன.
நாட்டின் சுகாதார சேவையில் சவால் மிக்க எதிர்கால பயணத்தில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் இலக்கை அடைந்து கொள்வதற்காக திறமையான மற்றும் அர்ப்பணிப்பு உடைய சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை சுகாதார சேவைக்காக அத்தியாவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர் சுகாதாரம் உட்பட பல துறைகளில் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் மற்றும் சர்வதேச புகழை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இந்த புதிய பணியாளர்களின் பொறுப்பு என்றும், தொழில் முன்னேற்றம் நாட்டின் எதிர்கால சுகாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு பாரிய சக்தியாகும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இதன் போது டிப்ளோமாதாரிகளின் தொழில் பொறுப்பை தெளிவுபடுத்திய அமைச்சர் டிப்ளோமா என்பது வெறும் தகுதி மாத்திரமன்றி, தேசிய பொறுப்பை பொறுப்பெடுப்பதாகவும், அந்த தொழிலாளர்களின் நல்ல ஒழுக்கம், பணிவு மற்றும் அர்ப்பணிப்புடன் பொது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளில் மாத்திரம் சுகாதார சேவையை கொண்டு செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் சுகாதார சேவையை நவீன மயப்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தரமான சுகாதார சேவை ஒவ்வொரு பிரஜைக்கும் சென்றடைய செய்வதற்காக விசேட முதலீடு மேற்கொள்ளப்படுவதாகவும், சுகாதார கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அவசியமான ஆளணி வளத்தை அபிவிருத்தி செய்தல், தொழிலாளர்களுக்கு தமது துறையில் தொடர்ந்து பயிற்சி மற்றும் அறிவை வழங்குதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கு அவசியமான பயிற்சிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
_large.jpg)
Post a Comment