Ads (728x90)

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 

நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget