Ads (728x90)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முதலிடம்' கொள்கையையும், இரு நாடுகளினதும் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் இந்தியத் துணை ஜனாதிபதி இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget