Ads (728x90)

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துணை ஜனாதிபதியும், பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளனர். 

பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்திலும் இந்தியத் துணை ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நாகரிக மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget