Ads (728x90)

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, தித்வா புயலினால் சேதமடைந்த அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரது புதிய வீடு குடிபுகும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று முற்பகல் கலந்துகொண்டார். 

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் கீழ் ஐந்து மாத காலப்பகுதியில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். 

அதேவேளை, இப்பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. 

பிரதேச மக்களுடன் இணைந்து புதிய வீட்டில் புத்தாண்டு சடங்குகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கிருந்த அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget